14/07/2025
🇫🇷 *பாஸ்டில் தினம்!.*
🇫🇷 பாஸ்டில் தினம் (Bastille Day) என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் ஜூலை 14-ஆம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் *"Fête Nationale"* ("தேசிய விடுமுறை நாள்"), "quatorze juillet" என்று அழைக்கப்படுகிறது. 1789 ஆம் ஆண்டில் ஜூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ஆம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
🇫🇷 இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிவகுத்தது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
*Courtesy; French Town 360* 🇫🇷 | 🇮🇳