Nagercoil & Tirunelveli Area Buses

Nagercoil & Tirunelveli Area Buses தென் தமிழகப் பேருந்துகளின் தகவல்கள்

For Promotion message 📥 me...
(8)

விட்டா பக்கத்து வண்டி கண்ணாடி வரைக்கும் க்ளீன் பண்ணிருவாங்க போல... 🚘🧼😂Just for Fun 😉😜நேற்று எடுத்த படம் இது... 📸 மழை நேர...
05/06/2026

விட்டா பக்கத்து வண்டி கண்ணாடி வரைக்கும் க்ளீன் பண்ணிருவாங்க போல... 🚘🧼😂

Just for Fun 😉😜

நேற்று எடுத்த படம் இது... 📸 மழை நேரம்... 🌧️ அங்கே இங்கேன்னு சின்ன சின்ன பழுதுகள் வருவதும், அதை உடனே சரி செய்து விடுவதுமாகத் தொடர்கிறது!🛠️🚗🌧️

📍குறிப்பு: நான் படம் எடுக்கும் போது வண்டி இயக்கத்தில் இல்லை... 🚫🔑 டிஜிட்டல் போர்டும் (Digital board) அணைத்து தான் வைக்கப்பட்டிருந்தது... 📴 안전!

---


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல்...நம்மில் பலருக்கும் திரு. பிரதாப் எம்., ஐ.ஏ.எஸ்., அவர்கள் த...
05/06/2026

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல்...

நம்மில் பலருக்கும் திரு. பிரதாப் எம்., ஐ.ஏ.எஸ்., அவர்கள் தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அறிமுகமானவர். ஆனால், அதற்கு முன்பு அவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது மேற்கொண்ட ஒரு புதுமையான நீர்வளப் பாதுகாப்பு முயற்சி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

திருவள்ளுவர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டிருந்ததை கவனித்த திரு பிரதாப் ஐ ஏ எஸ் ஒரு புது முயற்சியை மேற்கொண்டார். (விருதுநகரை சேர்ந்த அவர் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்).

பயன்பாடின்றி கைவிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளை அவர் ஒரு பிரச்சினையாக அல்ல, ஒரு வாய்ப்பாகக் கண்டார். அவற்றை மூடி மறைப்பதற்குப் பதிலாக, மழைநீரை நிலத்தடிக்குள் செலுத்தும் நிலத்தடி நீர் மீள்நிரப்பு (Groundwater Recharge) அமைப்புகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தினார்.

1,200-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டும் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டன. மழைக்காலங்களில் சேகரிக்கப்படும் மழைநீர் இவ்வமைப்புகள் மூலம் நிலத்தடிக்குள் செலுத்தப்பட்டதால், பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. இதன் பலனை விவசாயிகளும், பொதுமக்களும் நேரடியாக அனுபவித்தனர். அடுத்த மழைக்காலத்திலேயே நிலத்தடி நீர் பத்து அடிக்கு மேல் உயர்ந்தது. கிணறுகளில் நீர்நிலை உயர்ந்தது, அடிப்பம்புகளில் மீண்டும் தண்ணீர் வர ஆரம்பித்தன.

இந்த முயற்சியின் சிறப்பு என்னவென்றால், இதற்கு மிகப்பெரிய கட்டுமானப் பணிகளோ, அதிக செலவுடைய தொழில்நுட்பங்களோ தேவைப்படவில்லை. “ஒவ்வொரு மழைத்துளியும் வீணாகாமல் மண்ணுக்குத் திரும்ப வேண்டும்” என்ற எளிய சிந்தனையே இதன் அடிப்படை.

2000க்கும் மேற்பட்ட குளங்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தின் சிறப்பு. மலைகளில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீர் கடலுக்குள் போய் சேராமல் தடுத்து நிறுத்துவதற்காக திருவிதாங்கூர் மன்னர்களின் காலத்திலே உருவாக்கப்பட்ட நம் குளங்கள், ஆனால் இன்று மாயாஜால வித்தைகளால் கிரானைட் கடைகளாலும் டீ கடைகளாலும் மாற்றப்படுகின்றன…

பெரும்பாலான குளங்கள் மழைநீரை சேமிக்கும் நீர்நிலைகளாக அல்லாமல், வீட்டு கழிவுநீர் மற்றும் கழிப்பறை கழிவுகள் கலக்கும் சாக்கடைகளாக மாறிவிட்டன.

இவை அனைத்தின் விளைவாக கன்னியாகுமாரி மாவட்டத்தின் நிலத்தடி நீர் நிலை அபாயகரமான அளவில் குறைந்து வருகின்றது..

மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சிறப்பான முயற்சிகளுடன் தொடர்புடைய அதிகாரி இன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பது நம்பிக்கையும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்வளப் பாதுகாப்பிலும், நிலையான வளர்ச்சியிலும் மேலும் பல முன்னோடி முயற்சிகள் நம் மாவட்டத்திலும் உருவாகட்டும்.

முனைவர் சைலேந்திர_பாபு_IPS பிறந்த தினம்.💐🎂🎂Dr. C. Sylendra Babu IPS MSc. MA, BGL, MBA, Ph.Dஇவர் 1962 ஆம் ஆண்டு ஜுன் 5 ம்...
05/06/2026

முனைவர் சைலேந்திர_பாபு_IPS பிறந்த தினம்.💐🎂🎂

Dr. C. Sylendra Babu IPS MSc. MA, BGL, MBA, Ph.D

இவர் 1962 ஆம் ஆண்டு ஜுன் 5 ம் தேதி கன்னியாகுமரி குழித்துறையில் பிறந்தார்...
இவர் 1987ம் ஆண்டு தமிழ் நாடு கேடரில் ஐபிஎஸ் பட்டம் அதிகாரியாக தேர்வானார் சைலேந்திர பாபு.

எஸ்.பி முதல் தமிழ்நாட்டின் டிஜிபி வரை.. !

சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. 58 வயது நிறைந்த இவர் 1987ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டம், எம்பிஏ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப்படிப்பையும் முடித்துள்ளார். 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், சென்னை அடையாறு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார். வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்த போது அதில் முத்திரை பதித்தவர்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர்:

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய போது 2004ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல், வீரமணி போன்ற ரவுடிகளின் கதைக்கு முடிவு கட்டினார்.

தற்போது சென்னையில் பெரிய ரவுடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால் அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள்தான் காரணம் என காவல்துறையிரே கூறுகின்றனர். வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்தவர்.

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றிய போது, பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

வடக்கு மண்டல ஐஜி, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி:

அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரை தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது. 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய

சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக் களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டை பெற்றது.

3 ஆண்டுகள் அவர் தலைமையில் செயல்பட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமம் இதுவரை பெறாத புதிய பலம் பெற்றது. தமிழகம் முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாத படி தமிழக கடல் எல்லைகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட்டது.

பணத்துக்கு ஆசைப்பட்டு கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சைலேந்திரபாபு, அவ்வாறு செல்பவர்களை அழைத்து விழிப்புணர்வு அளித்தார். இதனால் கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவிற்கு தற்போது செல்வது குறைந்துள்ளது. அதனையடுத்து, சைலேந்திரபாபு சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அந்த திட்டம் அமைந்தது.

14 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் கைதிகள் வெளியே சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று விழிக்காமல் டிரைவர் தொழில் செய்து அவர்கள் தங்கள் வருமானத்தை தேடிக் கொள்ள இது ஏதுவாக அமைந்தது. மேலும் நன்னடத்தையுடன் உள்ள கைதிகள் 700க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

பின்பு அவர் டிஜிபியாக பதவி உயர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ரயில்வே காவல்துறை டிஜிபியாக பதவியில் இருந்துள்ளார்.❤️❤️👑

‘‘25 நிமிட போட்டியில் வெற்றி பெற 25 வருட பயிற்சி தேவைப்படும், மாணவர்களுக்கும் இது பொருந்தும்’’ என்ற சைலேந்திரபாபுவின் வார்த்தைகளில் அவரது வாழ்க்கையின் வெற்றியும் அடங்கும்.

தனது 30 ஆண்டுகால காவல்துறை அனுபவத்தில் சைலேந்திரபாபு பல அரிய சாதனைகளை நிகழ்த்திய அவரது கடமை உணர்வை பாராட்டி குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப்பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார்.❤️❤️👑

எழுதிய நூல்கள்:

‘YOU TOO BECOME AN IPS OFFICER’, ‘BE AMBITIOUS’, ‘PRINCIPLES OF SUCCESS IN INTERVIEW’, ‘A GUIDE OF HEALTH AND HAPPINESS’, ‘அமெரிக்காவில் 24 நாட்கள்’ ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.

ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.❤️❤️👑

புளியங்குடி அருகே (04/06/2026)  நவாச்சாலையில் அரசு பஸ்ஸும் தனியார் பள்ளி வேணும்  நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம...
05/06/2026

புளியங்குடி அருகே (04/06/2026) நவாச்சாலையில் அரசு பஸ்ஸும் தனியார் பள்ளி வேணும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நவாச்சாலை என்னும் இடத்தில் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே தனியார் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த வேனும் நேற்று மாலை 4:30 மணி அளவில் நேருக்கு நேர் மோதியதில் 7மாணவ மாணவிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த அனைவரையும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு மாணவன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்கிச்சைக்காக புளியங்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த மாணவ மாணவிகள் விபரம் வருமாறு,
உமேஸ்கான் (14) 9ஆம் வகுப்பு,
த/பெ சண்முகவேல்
பகவதியம்மன் கோவில் தெரு
புளியங்குடி.
அப்பானா (13) 8 ஆம் வகுப்பு
த/பெ பாதுஷா
பள்ளிவாசல் பெரிய முடுக்குத்தெரு
புளியங்குடி.

புளியங்குடியைச் சேர்ந்த முகிதா(12) 7ஆம் வகுப்பு
ஓடை தெரு திவான் மைதீன் மகன் முகமது சகில்(12)
முகம்மது தியான்( 10) 5ஆம் வகுப்பு
கோட்டைதிரடு தெரு
புளியங்குடி.
தாமரைநிலா (8) 3 ஆம் வகுப்பு
த/பெ வெற்றிகணேசன்
நவ்வாச்சாலை
முவிதா (12) 7 ஆம் வகுப்பு
த/பெ மாரியப்பராஜ்
சப்பாணி கருப்பன் கோவில் தெரு
புளியங்குடி.
அய்யாச்சமி (70) பள்ளி வேன் டிரைவர்
த/பெ சண்முகம் பிச்சாண்டி கீழத்தெரு
டிஎன் புதுக்குடி
புளியங்குடி
பூரணம் (38) பள்ளி வேன் ஆயா
க/பெ மகாலிங்கம்
கற்பகவீதி 3 வது தெரு
புளியங்குடி.
மற்றும் குழந்தையை கூட்டி வரச் சென்ற இவர் விபத்தை பார்த்த அதிர்ச்சியில் சுயநினைவு இல்லாமல் உள்ளார் சங்கீதா (28)
க/பெ வெற்றிகணேஷ்
நவாச்சாலை.
பேருந்தில் வந்தவர்களில் காயம் அடைந்தவர்கள் விபரம்
பாலகீர்த்திகா (18)
த/பெ பிச்சைமணி
தவணை
புளியரை
பேபி லட்சுமி (19)
த/பெ கணபதி
தவணை
புளியரை
வித்தியா (33)
க/பெ அருள் முருகன்
காலாடி தெற்கு தெரு
புளியங்குடி.
ஜெயந்தி (58)
க/பெ செல்லப்பா
பாலமார்த்தாண்டபுரம்
செல்லப்பா (65)
பாலமார்த்தாண்டபுரம்.

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
விபத்தில் காயம்பட்டைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா,நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
மேலும் இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 37.75 லட்சம் பறிமு...
04/06/2026

தமிழகத்தில் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 37.75 லட்சம் பறிமுதல்.😱😱😱

இப்போ 01.05pm (04-06-2026) நான் ஜன்னலோரம் உட்கார்ந்து இருக்கேன்… என் பக்கம் இந்த பெரியவர் உக்கார்ந்து இருந்தாரு… ரொம்ப ந...
04/06/2026

இப்போ 01.05pm (04-06-2026) நான் ஜன்னலோரம் உட்கார்ந்து இருக்கேன்… என் பக்கம் இந்த பெரியவர் உக்கார்ந்து இருந்தாரு…

ரொம்ப நேரம் கழித்து தான் அந்த இருக்கைகள் எங்களுக்கு கிடைத்தது…

அடுத்த நிறுத்தத்தில் ஒரு அக்கா கைக்குழந்தையோடு ஏறினார்.. பேருந்துல சீட் இல்ல…
முன்னாடி இருந்து நடுப்பகுதிக்கு வந்துட்டாங்க.. யாரும் சீட் குடுக்க முன் வரல… ❤️❤️🚍😎

ஆனா இந்தப் பெரியவருக்கு 70+ இருக்கும்… என்கிட்ட எதுவும் கேக்கல.. டக்குன்னு “தாயி நீ இதுல உக்காரு பச்சப்புள்ளைய வச்சிருக்க “ ன்னு எந்திச்சிட்டாரு 😱!!!
இப்போ நான் எந்திச்சு தான் ஆகனும்.. ஏன்னா எங்க ஊர்ப்பக்கம் தெரியாத பெண்கள் பக்கம் இருக்கை பகிர முடியாது… இது எங்க ஊர்காரங்களோட விதிமுறை… நானும் எந்திச்சு அந்த பெரியவரை இன்னும் வியப்பா பார்த்து design design ஆஹ் போட்டோ எடுத்துட்டு இருக்கேன்… வயதானாலும் கம்பீரமான தோற்றம்… ❤️❤️🚍👑

இதைவிட இன்னொரு முக்கியமான விசயம்… அந்த அய்யா யார் என்னன்னு எதுமே பார்க்கல…
அவர் மஞ்சள் நிற சந்தனம் நெற்றில பூசிருக்கார்.. அந்தக்கா பர்தா அணிந்து இருக்கு…
இது தானய்யா எங்க ஊரு.. என் நாடு… தமிழ்நாடு.. 🤩.. ❤️❤️

இதுமாதிரி பல நடந்தாலும் இது தினமும் நடக்குறது நம்ம தமிழ் மண்ணுல தான்…
இந்த வாழ்க்கையை தான் நாம வாழ ஆசைப்படுறோம்… 🙏🙏

பெரியவங்க யாரும் நம்ம வாழ்கை முறையை மறக்கல… ஆனா நாம தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரோம்… 🙏🙏🙏

அந்த பெரியவரு வாழ்வாங்கு வாழனும் … இறைவன் அருளால் ❤️…❤️❤️👑

Thanks to Syed Shifa Bhai... (Writer-Fb Post)🙏

காவல்துறைக்கு வாழ்த்துகளும் நன்றியும்...👏👏 வடசேரி பேருந்து நிலையத்தினுள் SETC பேருந்துகள் நிற்கும் இடம் அருகே நீண்ட நெடு...
04/06/2026

காவல்துறைக்கு வாழ்த்துகளும் நன்றியும்...👏👏

வடசேரி பேருந்து நிலையத்தினுள் SETC பேருந்துகள் நிற்கும் இடம் அருகே நீண்ட நெடுங்காலமாக 'No Parking' என்ற போர்டு இருக்கும்... 🚫🚌

ஆனாலும் நம் மக்கள் பெரும்பான்மையாக அதன் அருகிலேயே தங்கள் இருசக்கர வாகனத்தைப் பார்க் செய்வார்கள்... 🏍️🛵 அதன் அருகே உள்ள காவலர்கள் "இங்கே பார்க் செய்யாதீர்கள்" என்று அறிவுறுத்துவதும் வாடிக்கையாக இருந்தது... 👮‍♂️🗣️

அதற்கு ஒரு நாள் முடிவாக இப்போது அந்த இடம் பேரிகார்டு (Barricade) அமைக்கப்பட்டு... 🚧 அதில் தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது... 📋 நல்ல முயற்சி... 👍 இதையும் தாண்டி வண்டிகளை நிறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... ⚖️🚨

யாராவது "இப்படி பண்ணுனா நாங்க வண்டிய எங்க கொண்டு போய் பார்க் பண்ணுறது?"னு கேட்காதீங்க... 🤫 அதுக்கு நிறைய இடம் இருக்கு அந்த சுற்றுவட்டாரத்தில்... 🅿️ கொஞ்சம் நடக்கணும், அவ்வளவுதான்! 🚶‍♂️🚶‍♀️

---

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விப த்தில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு, ஐந்து பேர்...
04/06/2026

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விப த்தில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு, ஐந்து பேர் படு காயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே மேலக்குறப்பாளையம் என்ற இடத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று விற்று இன்று காரில் வீடு திரும்பியுள்ளனர்

அப்போது கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் கார் சாலையோர பள்ளத்தில் தலைக்குப் புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த எட்டு இளைஞர்களில் ஆறு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

பலத்த காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சந்தோஷ் என்ற இளைஞர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போதே சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதில் படுகாயம் அடைந்த கிஷோர், கார்த்திக், ரிஷி கண்ணன், ராசி, சுதர்சன் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பிரேதக்கடங்கில் வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து குளித்தலை டிஎஸ்பி பொறுப்பு பாலகிருஷ்ண பிரபு மற்றும் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரசு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

💰 நாங்கெல்லாம் ரிச் கார்ப்பரேஷன்... 😎✨ஒரு மொஃபுசல் BS6 வண்டிய கடந்த இரண்டு நாட்களாக தடம் எண் 4 - நாகர்கோவில் ↔️ கீரிப்பா...
04/06/2026

💰 நாங்கெல்லாம் ரிச் கார்ப்பரேஷன்... 😎✨

ஒரு மொஃபுசல் BS6 வண்டிய கடந்த இரண்டு நாட்களாக தடம் எண் 4 - நாகர்கோவில் ↔️ கீரிப்பாறை** தடத்தில் இயக்கும் நாகர்கோவில் மண்டலம்... 🚌🔥🛣️

(இந்த வண்டி ஒருவேளை ஸ்பேர் வண்டியாக இருக்கலாம்)

Ex Pamba special Bus

KSRTC Volvo Rainy Ride😎🚍👑PC: Vysakh🙏🤝
04/06/2026

KSRTC Volvo Rainy Ride😎🚍👑

PC: Vysakh🙏🤝

Address

நாஞ்சில் நாடு
Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil & Tirunelveli Area Buses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share