TN:43 Gudalur Nillgiris TAXI Driver's

TN:43 Gudalur Nillgiris TAXI Driver's TAXI SERVICE
GUDALUR... nillgiris

31/07/2024

கூடலூர் காவல் நிலையத்தில் ஒரு தனி உதவி ஆய்வாளரின் அட்டகாசத்தால் சாமானிய மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நீ யார்... இது எனது காவல் நிலையம் என்பது பல்லாண்டுகளாக காவல் நிலையத்தை நாடும் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வார்ர்த்தையாக உள்ளது... எனவே கூடலூர் காவல் ஆய்வாளர் துணை கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டு மென கோரிக்கை விடுக்கிறோம் ...!

*கூடலூர் காவல் நிலையம் அதன் காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவின் காவல் நிலையமா...?!!*

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் சிறப்பு கவனத்திற்கு.

அய்யா,
வணக்கம், மேற்படி கூடலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளாராக பணி புரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் திரு. கபில்தேவ் என்பவர் ஒரு சினிமா பட போலீஸ் கதாநாயகனாக பாவித்துக் கொண்டு தான் பணியாற்றி வருகிறார். கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் மக்களிடம் ஆக்ரோஷமாக பேசுவதும் அவர்களுடன் துணைக்கு வருபவர்களை மிரட்டுவதும் கொச்சை படுத்துவதும் வழக்கமாக செய்து வருகிறார்.

காவல் நிலையம் செல்ல பயப்படும் அப்பாவி மக்கள் தைரியத்திற்காக அழைத்துச் செல்லும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மிகவும் கேவலமான முறையிலும் வன்மமான முறையிலும் இவர் கையாள்கிறார். குறிப்பாக இவர் வழக்கமாக கையாளும் ஒரு சொல் என்பது நீ யார்.. இது எனது ஸ்டேஷன் என்பது.. இது இன்று 31-07-2024 மாலை சுமார் 6 மணிக்கு நான் நேரடியாக சந்தித்த 3-வது நிகழ்வு. (தேவைப்பட்டால் அப்போது அங்கிருந்த காவலர்களின் பெயர்களை வெளியிடுகிறேன்.

எனவே புகார்தாரர்களையும் பொதுமக்களையும் சற்றும் மதிக்காமல் சிங்கம் சினிமா போலீஸ் சூரியா போல் தன்னை பாவித்து செயல்படும் கூடலூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. கபில்தேவ் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அச்சமின்றி கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Sulfi utvplus
Utv plus
NILGIRIVISION
Taluk General Secretary
Indian National Congress
9442085215
9487785215

07/08/2023
07/08/2023

அதையேதான் நானும் கேக்குறேன் எங்க இருக்கு 😂😂

07/08/2023
21/06/2023

Address

Gudalur

Telephone

+919486938220

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN:43 Gudalur Nillgiris TAXI Driver's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category