Waiting for National waterways project in India

Waiting for National waterways project in India We are provides a safe and reliable Private Taxi Transfer, VIP Transfer Service, Chauffeur Service i vehicles insurance

23/01/2024
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது தொண்டர்கள், ரசிகர்கள், குடும்பத்தார் அனைவருக்கும...
28/12/2023

தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது தொண்டர்கள், ரசிகர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

திரு. விஜயகாந்த் அவர்கள் நதிநீர் இணைப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஒரு முறை திரு. மாஃபாய் பாண்டியராஜன் அவர்கள் நம்முடைய நீர்வழிச்சாலைத் திட்டம் பற்றி அவரிடம் கூறியுள்ளார். அதில் அவருக்கு நிறைய சந்தேகங்கள் எழுந்ததால் திரு. மாஃபாய் பாண்டியராஜன் அவர்களிடம் என்னை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதன் பிறகு திரு. மாஃபாய் பாண்டியராஜன் என்னை திரு. விஜயகாந்த் அவர்களுடன் நேரில் சந்திக்க வைத்தார்.

திரு.விஜயகாந்த் வீட்டில் அவரை சந்திக்க சென்றபொழுது, அங்கு திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்தார். அது எனக்கு உதவியாக அமைந்தது. ஏனெனில், அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனது பொறியியல் கல்லூரி தோழர். நானும் அவரும் திரு விஜயகாந்த் அவர்களுக்கு தெளிவாக திட்டத்தை புரியவைத்தோம்.

திரு. விஜயகாந்த் தனது கட்சி தேர்தல் அறிக்கையில் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை சேர்ப்பதோடு, செய்லபடுத்தவும் உறுதியளித்தார்.

ஆனால் அதன் பிறகு அரசியல் சூழ்நிலைகள் எல்லாம் மாறிவிட்டது என்பதை அனைவரும் அறிவர்.

தமிழ்நாட்டில் உள்ள GREENWINGS Aqua விற்பனை மற்றும் சேவைகளுக்கு வரவேற்கிறோம் இந்த சேவைகளை நாங்கள் அனைத்து குடியிருப்பு, வ...
13/05/2023

தமிழ்நாட்டில் உள்ள GREENWINGS Aqua விற்பனை மற்றும் சேவைகளுக்கு வரவேற்கிறோம் இந்த சேவைகளை நாங்கள் அனைத்து குடியிருப்பு, வணிக, தொழில்துறை, வீடு, சிறிய அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் பயன்பாட்டிற்கு செயல்படுத்துகிறோம். தமிழகம் முழுவதும் வீட்டு வாசலில் சேவை கிடைக்கும். இப்போது எங்களை அழைக்கவும் +91 9944560234,9489353955

நமது  வெற்றிப்படிக்கட்டுக்கள்நம்மில் சிலர் நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லையே என நினைக்கலாம...
05/10/2022

நமது வெற்றிப்படிக்கட்டுக்கள்
நம்மில் சிலர் நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லையே என நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு கீழ்கண்ட நாம் வந்த வெற்றிப்படிக்கட்டுகளை விளக்கிட வேண்டிய நேரம் இது.
1. உச்ச நீதிமன்றம் நதிநீர் இணைப்பு பற்றிய வழக்கில், நதிநீர் இணைப்பு என நீங்கள் செய்யும்பொழுது நீர்வழிச்சாலையும் சேர்த்துச் செய்யுங்கள் என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதற்கு காரணம் நம்முடைய இடைவிடா முயற்சி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
2. திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது திரு. சுரேஷ் பிரபு தலைமையில் அமைக்கப்பட்ட நதி நீர் இணைப்பு உயர் மட்ட குழு நாடு முழுவதிலிருந்து பல மாற்றுத் திட்டங்களை பெற்று ஐ.ஐ.டி பேராசியர்களை கொண்டு ஆராய்ந்தது. அதில் கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலைத் திட்டமே தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மிகச் சிறந்த மாற்றுத் திட்டம் என அறிவித்தது.
3. பீகாரில் நம்முடைய நீர்வழிச்சாலைத் திட்டம் அம்மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பீகார் தலைமைச் செயலாளர் மத்திய திட்டக்குழுவிற்கு கடிதம் அனுப்பி, மத்திய அரசால் தேசிய திட்டம் என அது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் நம்முடைய தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை முழுமையாக புரிந்துகொண்டு அ. இ. அ .தி.மு.க தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார்கள்.
5. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் பொறியாளர்.ஏ.சி.காமராஜ் கொடுத்த நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை அவரது ஆலோசனை பெற்று செயல்படுத்த அறிக்கை விட்டுள்ளார். இது முக்கிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளது.
6. கேரளா முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு உம்மன் சாண்டி அவர்கள் உங்களுடைய நீர்வழிச்சாலை ஆக்கப்பூர்வமானது. நிச்சயம் பரிசீலிப்போம் என நமக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு நீர்வளத்துறை செயலாருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
7. கொல்கத்தாவைச் சேர்ந்த அமைச்சர் திரு.சுபாஷ் சக்கரவர்த்தி, எங்களுக்கு நீர்வழிச்சாலை முக்கியம். நதிநீர் இணைப்புத் திட்டம் என ஒன்று செயல்படுத்தப்படுமாயின், அது உங்களுடைய நீர்வழிச்சாலைத் திட்டமாகத் தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
8. மாண்புமிகு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு நாம் நவீன நீ

நேற்று (28.7.21) திருச்சி மண்டல நீர் ஆதார  தலைமை பொறியாளர் திரு. இராமமூர்த்தி அவர்களை நமது வல்லுநர்குழு  உறுப்பினர்கள்  ...
29/07/2021

நேற்று (28.7.21) திருச்சி மண்டல நீர் ஆதார தலைமை பொறியாளர் திரு. இராமமூர்த்தி அவர்களை நமது வல்லுநர்குழு உறுப்பினர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்து நவீன நீர்வழிச்சாலை திட்டத்தினை விளக்கியுள்ளார்கள். அப்பொழுது இத்திட்டம் குறித்து தான் ஏற்கனவே படித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டிய அருமையான திட்டம் என்றும் பாராட்டியுள்ளார். அதோடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்கு எப்பொழுதும் தனது முழு ஆதரவு உண்டு என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

(25.5.21) தினகரன் நாளிதழில்...
27/05/2021

(25.5.21) தினகரன் நாளிதழில்...

அன்புடையீர்,கொரோனோ பெருந்தொற்றின் 2 ஆம் கட்ட அலை பரவல் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலோனோர் கூட்டத்தில் கலந்து கொள்ள தயங்...
24/03/2021

அன்புடையீர்,

கொரோனோ பெருந்தொற்றின் 2 ஆம் கட்ட அலை பரவல் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலோனோர் கூட்டத்தில் கலந்து கொள்ள தயங்கியதால் நாளை (25.3.21)மாலை 4 மணிக்கு மதுரை கே.கே.நகர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த நவீன நீர்வழிச்சாலை ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, தாங்கள் தங்களது ஆலோசனைகள் / கருத்துக்களை whatsapp (9500332020) facebook இல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஏ.சி.காமராஜ்.

Address

Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when Waiting for National waterways project in India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waiting for National waterways project in India:

Share

Category